முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் தந்தையின் மறைவையொட்டி, நேரில் அஞ்சலி செலுத்திய எம் எல் ஏ
அரனாரையில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் தந்தையின் மறைவையொட்டி சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.;
Update: 2024-05-31 14:33 GMT
அஞ்சலி செலுத்திய போது
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட்ட அராணரையில், மே.30 ம் தேதி மாலை முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பேபி காமராஜ் தந்தை செல்லமுத்து மறைவையொட்டி அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் இறந்தவரின் உடலுக்கு, மலர் அஞ்சலி செலுத்தி, மரியாதை செய்து, குடும்ப உறுபினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது, பெரம்பலூர் மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை உள்ளிட்ட, நகர வார்டு செயலாளர்கள் திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.