அரசு கல்லூரிக்கு பஸ் வசதி எம்எல்ஏ கோரிக்கை
கோரிக்கை;
Update: 2024-02-16 07:09 GMT
எம்எல்ஏ கோரிக்கை
கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரிக்கு பஸ் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்ககோரி, சட்டசபையில் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ., செந்தில்குமார் சட்டசபையில் பேசியதாவது; கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு, தற்போது சோமண்டார்குடி கோமுகி ஆற்றின் அருகே புதிய கட்டடம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது. கல்லுாரியில் 1,500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லுாரிக்கு பஸ் வசதி இன்மையால் மாணவ மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதேபோல் சிறுவங்கூரில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. ஆனால் உரிய நேரத்தில் பஸ்கள் செல்வது கிடையாது. இதனால் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.