வளர்ச்சி திட்ட பணிகளை எம்எல்ஏ ஆய்வு
ஆரணி அருகே வளர்ச்சி திட்ட பணிகளை எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார்.
Update: 2024-07-03 02:33 GMT
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சேவூர் ஊராட்சிக்குட்பட்ட ஸ்ரீராம் நகர், இந்திரா காந்தி தெருவில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சத்து ஏழாயிரம் மதிப்பீட்டில் பக்க கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைக்கும் பணி நிறைவடைந்தது. இந்த பணியினை ஆரணி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சேவூர். எஸ். ராமச்சந்திரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.