புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.
Update: 2024-01-17 16:31 GMT
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்களை சந்தித்து, பொங்கல் விடுமுறை நாட்கள் அன்று அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களை வாழ்த்தி மேலும் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் பொது வார்டு நோயாளிகளிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டு அதனை விரைந்து நிவர்த்தி செய்து தருமாறு மருத்துவர்களிடம் வலியுறுத்தினார்
புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்தரு டாக்டர் வை முத்துராஜா. இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.