வேலூர் அருகே கோடி போவதை மலர் தூவி வரவேற்ற எம்எல்ஏ
வேலூர் அருகே கோடி போவதை மலர் தூவி எம்எல்ஏ வரவேற்றார்.;
By : King 24X7 News (B)
Update: 2023-11-30 13:07 GMT
மலர் தூவி வரவேற்ற எம்எல்ஏ
வேலூர் அருகே கோடி போவதை மலர் தூவி வரவேற்றார் .எம் எல் ஏ. வேலூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக அவ்வப்போது விட்டுவிட்டு இரவு நேரங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.
அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி கிழக்கு ஒன்றியம் வசந்தநடை ஊராட்சி ஒக்கனாபுரம் கிராமத்தில் உள்ள ஏரி நிரம்பி கோடி போனது. இதனை வேலூர் மாவட்ட திமுக மாவட்ட செயலாளரும் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினருமான நந்தகுமார் மற்றும் அந்த ஊர் கிராம மக்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர்.
இதில் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் பாபு ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேசன் குமாரபாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.