மடத்துப்பட்டி ஊராட்சிக்கு மின்சார வாகனம் வழங்கிய எம்எல்ஏ

தென்காசி மாவட்டம், மடத்துப்பட்டி ஊராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மைக்காக மின்சார வாகனம் வழங்கப்பட்டது.;

Update: 2024-03-01 07:10 GMT
மடத்துப்பட்டி ஊராட்சிக்கு மின்சார வாகனம் வழங்கிய எம்எல்ஏ.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே மடத்துப்பட்டி ஊராட்சிக்கு திட மற்றும் திரவ கழிவு குப்பைகளை விரைவாக அப்புறப்படுத்துவதற்காக சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன்திருமலைக்குமார் அவர்கள் மடத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செய்யது இப்ராஹிம் அவர்களிடம் மின்சார வாகனத்தை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய சேர்மன் சங்கரபாண்டியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News