கோழிமுத்தி யானைகள் முகாமை ஆய்வு செய்த எம்எல்ஏ

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகத்திற்குட்பட்ட டாப்ஸ்லிப் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு செய்தார்.;

Update: 2024-03-15 12:30 GMT

யானை முகாமில் எம்எல்ஏ ஆய்வு 

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகத்திற்குட்பட்ட டாப்ஸ்லிப் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு..   பொள்ளாச்சி.. மார்ச்..15 பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி வனச்சரகத்தில் உள்ள டாப்ஸ்லிப் கோழிக்கமுத்தி பகுதியில் வாழும் பழங்குடியின மலைவாழ் மக்களுக்கு அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய வீடுகள் கட்ட  திட்டமிடப்பட்டுள்ளது.

  இதனை அடுத்து டாப்ஸ்லிப்பில் உள்ள  பழங்குடியின குடியிருப்புகளான எருமைபாறை,கோழி கமுத்தி உள்ளிட்ட பகுதிகளுக்கு 4,95,000 மதிப்பீட்டின் 300 சதுர அடியில் மொத்தம் 40 வீடுகள் கட்டப்பட உள்ளது

Advertisement

இது குறித்து வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார் ஆய்வின் போது ஒப்பந்ததாரரிடம் தரமான முறையில் வீடு கட்டி தர வேண்டும் என எம்எல்ஏ அமுல் கந்த சாமி கோரிக்கை விடுத்தார்.

மேலும் இந்த ஆய்வில் கலந்து கண்ட  உலாந்தி வனச்சரகரிடம் பழங்குடியினருக்கு புதிய வீடுகள் கட்டும் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து உரிய மாற்று இடம் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.. ம.சக்திவேல்..பொள்ளாச்சி..9976761649..

Tags:    

Similar News