சீல் வைக்கப்பட்ட எம்எல்ஏ அலுவலக பூட்டு உடைக்கப்பட்டதால் பரபரப்பு

தர்மபுரியில் எம்எல்ஏ அலுவலகத்தில் சீல் வைக்கப்பட்ட பூட்டை மர்ம நபர்கள் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;

Update: 2024-05-22 13:18 GMT

தர்மபுரியில் உள்ள கோட்டாச்சியர் அலுவலகம் அருகே உள்ள தர்மபுரிதொகுதி சட்டமன்ற அலுவலகம் இயங்கி வருகிறது. கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் நடைமுறையை பின்பற்றி சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகங்கள் பூட்டி வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அந்த பகுதியில் வழியாக வந்த பொது மக்கள் ஈடுபட்டு கொண்டு இருந்த பொழுது தர்மபுரி தொகுதி சட்டமன்ற அலுவலகத்தில் உள்ள உள்புற கேட் திறந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.உடனடியாக தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரனுக்கும் காவல்துறையினருக்கும் பொதுமக்கள் தகவல் அளித்தனர்.

Advertisement

உடனடியாக சம்பவ இடத்திற்கு வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த பகுதியில் நள்ளிரவில் மர்ம நபர்கள் யாரேனும் கொள்ளையடிக்க முயற்ச்சி என போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் அலுவகத்தில் வெளிபுறம் உள்ள பூட்டு சீல் வைக்கப்பட்ட நிலையில் நழைவாயிலில் உள்ள பூட்ட்டில் சீல் வைக்கப்பட்டு உள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக உள்ளே உள்ள இரு அறைகளின் பூட்டுகள் உடைக்கப்படாமல் உள்ளது. அதனால் இப்பகுதியில் பாதுகாப்பு மற்றும் காவல்துறையினர் ரோந்து அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News