அனுமந்தபுரம் கிராமத்தில் ரேஷன் கடை அமைக்க கோரி எம்எல்ஏ மனு

வெள்ளகோவில் பகுதிக்குட்பட்ட அனுமந்தபுரம் கிராமத்தில் ரேஷன் கடை அமைக்க கோரி பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

Update: 2024-02-03 12:42 GMT

மனு அளித்த எம்எல்ஏ

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் பகுதிக்கு உட்பட்ட அனுமந்தபுரம் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு பகுதிநேர ரேஷன் கடை அல்லது மொபைல் ரேஷன் கடை அமைத்து தரக்கூடிய பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் கடந்த மாதம் குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து இருந்தனர்.

இந்த நிலையில், அப்பகுதி மக்கள், திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன், பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சந்திப்பு மனு அளித்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து இருப்பது அவருடைய விருப்பம் என்றும் தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி துவங்கலாம் என்றும் முடிவில் மக்கள் யாரை ஏற்று கொண்டு மணிமகுடம் சூட்டுவார்கள் என்பது அவர்களுக்கு தான் தெரியும்.

பாரதிய ஜனதா கட்சி கொங்கு மண்டலத்தில் வலுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவது குறித்த கேள்விகளுக்கு, பாரதிய ஜனதா கட்சியின் முயற்சியை குறைத்து மதிப்பிட முடியாது என்றும் உரிமை உண்டு என்றும் ஆனால் முடிவில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News