கொடைக்கானல் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை
கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று ,மாலை பெய்த மழையால் குளுமையான சூழல் நிலவியது.
Update: 2024-04-14 01:25 GMT
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது, இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று காலை முதல் மிதமான வெப்பம் நிலவிய நிலையில் மாலை வேளையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டு சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.
குறிப்பாக மூஞ்சிக்கல், அண்ணா சாலை, ஆனந்தகிரி, உகார்த்தே நகர், சென்பகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழையாகவும், ஊத்து, வாழைகிரி, நண்டான்கரை, பூலத்தூர் பிரிவு உள்ளிட்ட பிரதான மலை சாலைகளில் கன மழையாகவும் பெய்தது. இதனால் மலைப்பகுதி முழுவதும் குளுமையான சூழல் தொடர்கின்றது.