அதிமுகவை நாசம் செய்தவர் மோடி - ஐ.லியோனி

அதிமுகவை நாசம் செய்தவர் நரேந்திர மோடி தான்,மோடி கட்டுப்பிடித்தவர்கள் எல்லாம் தொலைந்தார்கள். உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியுடன் கூட்டணி வைத்து அக்கட்சியை காலி செய்துவிட்டார், தமிழகத்தில் பன்னீர்செல்வம் பலாப்பழமாக இருக்கிறார்,நாளை பழனிச்சாமி எடப்பாடியில் இலந்த பழம் விற்க உள்ளார் என சிவகாசி பரப்புரையில் திண்டுக்கல் லியோனி பேசினார்.

Update: 2024-04-07 05:42 GMT

திண்டுக்கல் லியோனி பிரச்சாரம்  

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் அம்பேத்கர் சிலை அருகே இண்டியா கூட்டணியில் இடைப்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மாணிக்கதாகூர் MPயை ஆதரித்து திண்டுக்கல் ஐ.லியோனி பேசுகையில், விடியல் பயணம் மூலம் பெண்கள் சுயமரியாதையுடன் வாழ்கின்றனர். இந்தியாவில் கடன் வாங்கிய 9 பேர் வெளிநாட்டில் பதுங்கி உள்ளனர். அவர்களின்  வங்கி கணக்கில் உள்ள 20 ஆயிரம் கோடியை பறிமுதல் செய்து மகாலட்சுமி திட்டம் மூலம் பெண்களுக்கு ஆண்டு ரூ.ஒரு லட்சம் வழங்கப்படும். மூன்று முறை முதலமைச்சராக இருந்த பன்னீர்செல்வம் பலாப்பழம் விற்றுக் கொண்டிருக்கிறார்.

அதிமுகவை நாசம் செய்தவர் நரேந்திர மோடி தான்,மோடி கட்டுப்பிடித்தவர்கள் எல்லாம் தொலைந்தார்கள். பால் தாக்கரே, உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியுடன் கூட்டணி வைத்து அக்கட்சியை காலி செய்துவிட்டார், தமிழகத்தில் பன்னீர்செல்வம் பலாப்பழமாக இருக்கிறார்,நாளை பழனிச்சாமி எடப்பாடியில் இலந்த பழம் விற்க உள்ளார்.ஆனால் இப்பொழுது பாமக ராமதாசை மோடி கட்டிப்பிடித்துள்ளார். பழனிச்சாமி சொல்கிறார் ஸ்டாலினுக்கு ஏழரை சனி பிடித்துள்ளது என்று,ஸ்டாலினுக்கு ஏழரை சனி என்றால் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஜென்ம சனி.ஒரு தலைவர் என்றால் அவர்களின் அடையாளமாக ஏதாவது திட்டம் இருக்க வேண்டும்.

எம்ஜிஆர் என்றால் சத்துணவு திட்டம், ஜெயலலிதா என்றால் மாணவர்களுக்கு இலவச சைக்கிள், பாடநூல் கழகத்தை கல்வியில் கழகம் மூலம் 11 இலவச பொருட்களை வழங்கினார் ஜெயலலிதா அம்மா தான்,புதுமைப்பெண் ஸ்டாலினின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை இந்தியாவே பின்பற்றுகிறது. இதே இடத்தில் பழனிச்சாமியும் நானும் மேடை போட்டு பேசுவோம், யாருக்கு மக்கள் அதிகமாக கைத்தட்டுகிறார்ளோ மற்றவர் அரசியலை விட்டு விலக வேண்டும் நீங்கள் தயாரா? ராதிகா சிறந்த நடிகை அவரை உங்களுக்கும் பிடிக்கும்,எனக்கும் பிடிக்கும். எம்.ஆர் ராதா எப்பேர்ப்பட்ட நடிகர், அவரது மகள் ராதிகா பாஜக வேட்பாளராக நிற்கிறார்,எவ்வளவு பெரிய கொடுமை இது.

ராதிகா வந்தால் பாருங்கள், கன்னத்தைப் பிடித்து முத்தம் கொடுங்கள், கை கொடுங்கள் வாக்கு மட்டும் போடாதீர்கள். கேப்டன் விஜயகாந்தின் மகன் அதிமுக கூட்டணி வேட்பாளராக நிற்கிறார். விஜயகாந்திற்கு அரசு மரியாதை கொடுத்தவர் ஸ்டாலின்.ஒரு ஆட்சி மாற்றானையும் மதிக்கும் மதிப்பது தான் திராவிட மாடல் ஆட்சி.உண்மையான தேமுதிக தொண்டர்கள் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும்.நான் பாடநூல் கழக தலைவராக இருக்கிறேன். காரணம் பாடநூல் கழக புத்தகத்தை அடிக்கக்கூடிய அச்சக உரிமையாளர்கள் இங்கு தான் உள்ளனர். உழைப்பாளர்களின் வாழ்க்கை தரம் உயர இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும்.இது நாட்டைக் காக்கும் கை வீட்டைக் காக்கும் இடத்தை எதிர்கால நாட்டின் நம்பிக்கை என எம்ஜிஆர் பாடலை பாடி காங்கிரஸ் வேட்பாளருக்கு லியோனி வாக்கு கேட்டார்.

விருதுநகரிலிருந்து மதுரைக்கு மின்சார ரயில், கல்விக்கடன், விவசாய கடன் ரத்து, ஜிஎஸ்டி வரி ஒழிப்பு, என்பன உன்கிட்ட பல்வேறு திட்டங்களையும் அளிக்கக்கூடிய கை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றார். மேலும் தேர்தல் பிரச்சாரத்தில் சட்ட மன்ற உறுப்பினர் அசோகன், மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ் பிரியா, முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் பொன்சக்திவேல் உள்பட இண்டியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News