மோடி அரசின் 10 ஆண்டு சாதனை விளக்க நிகழ்ச்சி
கறம்பக்குடியில் மோடி அரசின் 10 ஆண்டு சாதனை விளக்க நிகழ்ச்சி நடந்தது.
கறம்பக்குடியில் நடைபெற்ற மோடி அரசின் 10 ஆண்டு சாதனை விளக்க நிகழ்ச்சியில் பாஜகவில் இணைந்த கிறிஸ்துவ சிறுபான்மையினர் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கறம்பக்குடி ஒன்றியத்தை சேர்ந்த பந்துவக்கோட்டை, வாண்டான்விடுதி,புதுவிடுதி மற்றும் ரகுநாதபுரம் கிராமங்களில் தாமரை சின்னம் வரைந்து மோடி அரசின் பத்தாண்டு சாதனை விளக்க பிரசாரங்கள் வழங்கும் கிராமம் செல்வோம் திட்ட நிகழ்ச்சிகள் கறம்பக்குடி வடக்கு ஒன்றிய பாஜக தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக பொது செயலாளரும் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளருமான ஏவிசிசி கணேசன் மற்றும் மாவட்ட செயலாளரும் தொகுதி இணை அமைப்பாளருமான கங்காதரன் ஆகியோர் நிகழ்ச்சிகளுக்கு முன்னிலை வகித்தனர். அப்போது பந்துவகோட்டை ஊராட்சி கோணகொல்லைப்பட்டி கிராமத்தில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ சிறுபான்மை வகுப்பினர் மாற்றுக்கட்சிகளிலிருந்து விலகி ஜான்அடைக்கலராஜ் என்பவர் தலைமையில் பாஜகவில் இணைந்தனர்.அவர்களுக்கு ஏவிசிசி கணேசன் சால்வை அணிவித்து பாஜக உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார். கறம்பக்குடி வடக்கு ஒன்றிய பொதுச்செயலாளர் ரங்கராஜு ஒன்றிய துணை தலைவர்கள் சுரேஷ், குமரேசன்,விவசாய அணி மாவட்ட செயலாளர் முருகையன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் முருகேசன்,ஒன்றிய பிரிவு தலைவர் முருகேசன் ஓபிசி அணி ஒன்றிய தலைவர் ரமேஷ்,இளைஞரணி ஒன்றிய தலைவர் கதிரவன்,மருத்துவர் பிரிவு ஒன்றிய தலைவர் செந்தில்குமார், கல்வியாளர் பிரிவு ஒன்றிய தலைவர் ஜெயகுமார் மற்றும் பூத்கமிட்டி நிர்வாகிகள் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தொடர்ந்து நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் எதிர்வரும் 27ம்தேதி பல்லடத்தில் நடைபெறும் பாரத பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் பூத்வாரியாக சென்று கலந்து கொள்ள திட்டமிடப்பட்டது. முன்னதாக பந்துவகோட்டை கிளைத்தலைவர் செல்லத்துரை அனைவரையும் வரவேற்றார் நிறைவில் ரகுநாதபுரம் கிளைத்தலைவர் கார்த்திக் நன்றி கூறினார்.