மோடியின் வருகையால் எதிர்க்கட்சிகளுக்கு சாதகம் : கி. வீரமணி பேட்டி

தமிழகத்துக்கு பிரதமர் மோடியின் வருகையால் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமான சூழல் அதிகரித்து வருகிறது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.

Update: 2024-03-26 08:22 GMT

தமிழகத்துக்கு பிரதமர் மோடியின் வருகையால் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமான சூழல் அதிகரித்து வருகிறது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.


தமிழகத்துக்கு பிரதமர் மோடியின் வருகையால் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமான சூழல் அதிகரித்து வருகிறது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.  தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை மாலை தெரிவித்தது: பாஜக மூன்றாவது முறையும் ஆட்சி அமைத்தால், இதுதான் கடைசி தேர்தல் என்கிற சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இதை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் புரிந்து கொண்டனர். எனவே, வருகிற தேர்தல் மூலம் இந்தியா கூட்டணியின் ஆட்சிதான் அமையும் என்பதில் சந்தேகமில்லை. இதைத்தான் மக்கள் உணர்வுகள் பிரதிபலிக்கின்றன. வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவுக்கு தேர்தலில் நிற்பதற்குக் கூட வேட்பாளர்கள் கிடைக்கவில்லை.

அதனால், பிரதமர் அசாமுடன் திரும்பி வந்து விட்டார். இச்சூழ்நிலையில் எதிர்க்கட்சிகள் மிகவும் அமைதியாக பெரிய அளவில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். எனது பிரசாரம் ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 17 ஆம் தேதி நிறைவடைகிறது. மோடியின் எதேச்சதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நினைக்கிறவர்கள் தங்களது வாக்கைப் பயனுள்ளதாக ஆக்க வேண்டும். இதன் அடிப்படையில் எங்களது பிரசாரம் அமையும். தமிழகத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு பிரதமர் வந்து பேசுகிறாரோ, அவ்வளவுக்கு அவ்வளவு எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கிறது. எனவே, திமுக கூட்டணி வெற்றி பெறுவதற்கு பிரதமர் ஒவ்வொரு முறையும் உரம் போடுவது போல உள்ளது" என்றார் கி.வீரமணி.

Tags:    

Similar News