கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட முதியவர் அடித்துக் கொலை!

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.;

Update: 2024-05-14 07:29 GMT

1

பாணாவரத்தை அடுத்த பழையபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (70), கூலித்தொழிலாளி. இவரிடம் பழையபாளையம் காலனி பகுதியை சேர்ந்த தொழிலாளி வடிவேலு (59) என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.2 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். இந்தநிலையில் கடந்த 8-ந் தேதி காலை கோவிந்தாங்கல் கூட்ரோட்டில் உள்ள டீக்கடைக்கு சண்முகம் டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த வடிவேலுவிடம், சண்முகம் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.

Advertisement

இதில் அவர்கள் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த வடிவேலு கடையில் இருந்த விறகுக் கட்டையை எடுத்து சண்முகத்தை தலை, மார்பு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சண்முகம் ரத்தவெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார்.அவருக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக சண்முகத்தின் தம்பி மனைவி லட்சுமி பாணாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பாணாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேலுவை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சண்முகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதையடுத்து கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News