பண மோசடி வழக்கு-போலீசார் விசாரணை
கோயம்புத்தூரில் ஏலக்காய் வியாபாரியிடம் பண மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.;
பணமோசடி வழக்கு பதிவு
கர்நாடக மாநிலம், மங்களூருவை சேர்ந்த சஞ்சய்(24) ஏலக்காய் வியாபாரம் செய்து வருகிறார்.இவரை தொடர்பு கொண்ட கோவைப்புதூர் பகுதியை சேர்ந்த தீபா மற்றும் ஹூசைன் ஆகிய இருவரும் தங்களை லக்ஷ்மி டிரேடர்ஸ் உரிமையாளர் என அறிமுகப்படுத்தி ஏலக்காய் மாதிரிகளை பெற்றுள்ளனர்.
பின்னர் சஞ்சயை தொடர்பு கொண்டு பேசியவர்கள் ஆன்லைன் மூலம் ஒரு டன் ஏலக்காய் வேண்டும் எனவும் பொருட்கள் பெறபட்ட உடன் பணம் அளிப்பதாக கூறி உள்ளனர்.இதனை நம்பி சஞ்சய் மற்றும் அவரது தகப்பனார் 23,52,000 ரூபாய் மதிப்பிலான பொருட்களை லாரி மூலம் கோவைப்புதூரில் உள்ள குடோனுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.பொருட்களை பெற்றபின் தொகையை முழுமையாக கொடுக்காமல் ஏழரை லட்ச ரூபாயை தவணை முறையில் தீபா மற்றும் ஹூசைன் வழங்கி உள்ளனர்.
மீதமுள்ள தொகையை தர மறுத்ததால் சஞ்சய் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த குனியமுத்தூர் போலீசார் தீபா,ஹூசைன்,சந்திரசேகர்,பிரேம்,சாய்நிதி உள்ளிட்ட ஐவரை விசாரணை செய்து வருகின்றனர்.