திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நடைபெற்ற நிலையில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.;

Update: 2024-06-22 05:42 GMT

திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இதில் புதிதாக கட்டப்பட்டு நிறைவடைந்த ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்திற்கு அனுமதி அளித்து நிறைவேற்றிக் கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் விவசாய பணிகளும் பொதுமக்கள் பாதிப்படைவதாக உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.

Advertisement

இதற்கு பதில் அளித்த மின்வாரிய அதிகாரி கடந்த இரு மாதங்களாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் இருந்ததால் மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறவில்லை என்றும் கடந்த வாரம் சனிக்கிழமை பராமரிப்பு பணிக்காக மின் விநியோகம் நிறுத்தப்பட்டு மின் கம்பிகளில் உரசி சென்ற மரக்கிளைகள் அகற்றப்பட்டதால் இனி மின்தடை இருக்காது என உறுதி அளித்தனர்.

மற்றொரு உறுப்பினர் 100 நாள் வேலை வாய்ப்பு பணி வழக்கம் போல அனைத்து பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் அரசின் வழிகாட்டுதலின்படி நடைபெற்று வருவதாகவும், மேலும் உறுப்பினர்கள் கோரிக்கை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் உறுதியளித்தார்.

Tags:    

Similar News