மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலின் 7 நாட்கள் திருவிழா!

கடந்த 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலின் 7 நாட்கள் திருவிழா மகா சிவராத்திரி முதல் துவக்கம். இரவு முழுவதும் பக்தர்கள் கண் விழித்து சிறப்பு வழிபாடு.

Update: 2024-03-09 06:00 GMT
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பகுதியில் அருள்மிகு மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள இக்கோவில் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக, மிகவும் சிறப்பு வாய்ந்த 1000 ஆண்டுகளுக்கும் மேல் பலமையான இத்திருக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகா சிவராத்திரி அன்று இரவு திருவிழா துவங்கி 7 நாட்கள் நடை பெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த மாதம் 16,ஆம் தேதி திருவிழாவிற்கான கோவில் கொடியேற்றம் நடைபெற்று இன்று 08ஆம் தேதி மாசி மகா சிவராத்திரி முதல் 15ஆம் தேதி வரை 7 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. இதில் குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் இந்த கோவிலை குலதெய்வமாக வழிபடுவது ஐதீகம். அதே போன்று கோபுரமே இல்லாத கோவிலில் அடைத்த கதவுக்கே பூஜைகள் நடைபெற்று வருகின்றது. எனவே முதல் நாள் திருவிழாவான இன்று கோவிலின் அருகே உள்ள மஞ்சளாறு ஆற்றில் காமாட்சி அம்மனின் மூங்கில் பெட்டியில் குழந்தையாக மிதந்து வந்து ஒதுங்கிய இடத்தில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த ஐதீகத்தின் அடிப்படையில் கோவில் அறங்காவலர்கள் மற்றும் பரம்பரை பூசாரிகளாக உள்ள குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆற்றில் காமாட்சி அம்மன் குழந்தை உருவத்தில் வந்த மூங்கில் பெட்டிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் அடைந்தவுடன் பக்தர்கள் வழிபாடத் துவங்கினர். இதனைத் தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் முளைப்பாரி எடுத்தும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பெற்றவுடன், செங்கரும்பு கட்டில் தொட்டி கட்டி குழந்தையை படுக்க வைத்து காணிக்கையாக கொடுத்தும் இரவு முழுவதும் பக்தர்கள் மகாசிவராத்திரியை முன்னிட்டு கண் விழித்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். இந்த கோவில் திருவிழாவிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து வருகை தரும் பக்தர்களுக்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்களுக்கு தேவையான மருத்துவ வசதி, அன்னதானம், அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் கோவில் மற்றும் பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் 40க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை பொருத்தி காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுவதோடு திருவிழாவில் பக்தர்கள் கூட்டத்தை சீர் செய்வதற்காக பெரியகுளம் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் 3 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 12 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வெளியூர் பக்தர்கள் வந்து செல்வதற்காக பெரியகுளம் மற்றூம் வத்தலகுண்டு பகுதியில் இருந்து 20 சிறப்பு பேருந்துகள் போக்குவரத்து துறை சார்பாக இயக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News