அரசு மகளிர் கல்லூரியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

சிவகங்கை அரசு மகளிர் கலைக் அறிவியல் கல்லூரியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்

Update: 2024-06-14 06:26 GMT

மாணவர் சேர்க்கை 

சிவகங்கை அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் இளநிலை பிரிவுகளில் மொத்தமுள்ள 748 இடங்களுக்கு 10,082 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ் இலக்கிய பாடப்பிரிவில் சேர மாணவிகள் ஆர்வம். இக்கல்லூரியில் 2024-2025- ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் கட்ட கலந்தாய்வின் மூலம் மாணவிகள் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணிதம், கணினி அறிவியல், மனையியல் (ஹோம் சயின்ஸ்) ஆகிய பாடப்பிரிவுகளுக்காக கலந்தாய்வு நடத்தி தகுதியுள்ள மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து வணிகவியல் (பிகாம்), வர்த்தக(பிபிஏ) நிர்வாகவியல், வரலாறு, பொருளாதாரம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடத்தி தகுதியான மாணவிகள் சேர்வு செய்யப்பட்டனர். இக்கல்லூரியில், மாற்றுத்திறனாளி, விளையாட்டு, முன்னாள் ராணுவத்தினர், தேசியமாணவர் படை, பாதுகாப்பு படையினர், அந்தமான் & நிகோபர் ஆகிய சிறப்பு ஒதுக்கீடு பிரிவுகளுக்காக மொத்தம் 181 பேர் விண்ணப்பித்தனர்.

இவர்களுக்கான கலந்தாய்வு மே 28-ல் நடத்தி தகுதியுள்ள மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், தமிழ் இலக்கிய பாடத்தில் 60 இடங்களுக்கு 1,175 பேர் விண்ணப்பித்துள்ளது வியப்பில் ஆழ்த்தியுள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

பொதுப்பாடங்களுக்காக ஷிப்ட் – 1 மற்றும் ஷிப்ட் – II பயில்வதற்காக, தமிழ் இலக்கிய பாடத்துக்கு 1175 பேரும், ஆங்கில பாடத்துக்கு 570 பேரும், வரலாறு பாடத்துக்கு 444 பேரும், கணிதப் பாடத்துக்கு 389 பேரும், இயற்பியல் பாடத்துக்கு 456 பேரும், வேதியியல் பாடத்துக்கு 880 பேரும், தாவரவியல் பாடத்துக்கு 782 பேரும், விலங்கியல் பாடத்துக்கு 914 பேரும், கணினி அறிவியல் பாடத்துக்கு 714 பேரும், மனையியல் பாடத்துக்கு 330 பேரும், வணிகவியல் பாடத்துக்கு 693 பேரும், வணிக மேலாண்மை பாடத்துக்கு 743 பேரும், பொருளாதார பாடத்துக்கு 574 பேர் என ஷிப்ட்-1 -ல் 8,664 பேர், ஷிப்ட்- II -ல் 1,418 பேர் என மொத்தம் 10,082 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Tags:    

Similar News