அஞ்சல் ஊழியர்கள் ஸ்டிரைக் - 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு
அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்;
Update: 2023-12-14 03:32 GMT
அனைத்திந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் 7 கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளனர். இதனால் குமரி மாவட்டத்தில் பெரும்பாலான கிராமிய அஞ்சலகங்கள் மூடப்பட்டு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தில் 188 கிராமிய அஞ்சலகங்கள் செயல்படுகின்றன. இவற்றில் 280 மகளிர் உட்பட 450 பேர் பணியாற்றுகின்றனர். போராட்டத்தில் 120 மகளிர் உட்பட 204 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதன் காரணமாக மணியார்டர் பட்டுவாடா, தபால் பட்டுவாடா, இன்சூரன்ஸ் உள்ளிட்ட கிராமிய அஞ்சலக சேவைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன.கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்திந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.