மினி மராத்தான் போட்டியில் 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

மயிலாடுதுறையில் மாவட்ட காவல் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறை சார்பாக நடைபெற்ற மராத்தான் போட்டியில் 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

Update: 2024-01-06 11:42 GMT

மினி மராத்தான் போட்டி

மயிலாடுதுறையில் மாவட்ட காவல் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக சமத்துவம் காண்போம் விழிப்புணர்வு மரத்தான் போட்டி நடைபெற்றது. மூன்று பிரிவுகளில் ஆண்கள் பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்கள் பிரிவினருக்கு ஏழு கிலோமீட்டர் தூரமும் பெண்கள் பிரிவினருக்கு ஐந்து கிலோமீட்டர் தூரமும், 14 வயதில் இருந்து 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஆண்கள் பெண்கள் ஆகியோருக்கு மூன்று கிலோமீட்டர் தூரமும் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் தனித்தனியாக நடைபெற்றது. மயிலாடுதுறை காலாடெக்ஸ் பகையிலிருந்து போட்டிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த போட்டிகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் காவல்துறையினர் என 800க்கும் மேற்பட்டோர் இந்த விழிப்புணர்வு பார்த்தான் போட்டியில் கலந்து கொண்டனர். போட்டிகள் அனைத்தும் மேலையூரில் உள்ள அழகு ஜோதி அகடமி பள்ளியில் முடிவடைந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா பரிசுகள் ரொக்கபணம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
Tags:    

Similar News