குட்கா பொருட்களை விற்பனை செய்த தாய் மகன் கைது
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த தாய், மகன் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்ய படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து டிஎஸ்பி சுதீர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து நகர காவல் துறையினர் நகர் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர் அப்போது சங்கரன்கோவில் கோமதிபுரம் ஒன்றாம் தெரு பகுதியிலுள்ள ஒரு கடையில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்தனர் .
தொடர்ந்து அதிரடியாக கடைக்குள் புகுந்த தனிப்படை காவல்துறையினர் மற்றும் ஆய்வாளர் மனோகரன் தலைமையிலான நகர காவல் துறையினர் அங்கு மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்த சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான 135 கிலோ எடை கொண்ட கணேஷ் புகையிலை மற்றும் தூலிஃப் உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர் தொடர்ந்து குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்த தாய் வள்ளி(45) மற்றும் மகன் சிவாவை (23) கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.