மகளை அடித்த மருமகனை வீடுபுகுந்து தாக்கிய மாமியார் கைது

மயிலாடுதுறையில் மகளை அடித்த மருமகனை நள்ளிரவில் வீடுபுகுந்து தாக்கிய மாமியார் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து வ்சிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்;

Update: 2023-12-29 06:19 GMT

மாமியார் கைது

மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் பகுதியை சேர்ந்தவர் சூரிசெல்வம்(31), இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு நடைபெறுவது வாடிக்கை. சம்பவ தினத்தன்று கணவன் மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது சூரிசெல்வம் தனது மனைவியை அடித்துள்ளார். இதுகுறித்து சூரிசெல்வத்தின் மாமியாருக்குத்தகவல் கிடைத்துள்ளது. நள்ளிரவு 1.30 மணியளவில் சூரிசெல்வத்தின் வீட்டிற்குள் புகுந்த அவரது மாமியார் பிரேமாவதி(49) மற்றும் சுபாஷ்(28)செல்வம்(52) ஆகியோரை சேர்த்துக்கொண்டு சூரிசெல்வத்தை அடித்தும் உதைத்தும் கொலைமிரட்டல் விடுத்தும் சென்றுள்ளனர். இதுகுறித்து சூரிசெல்வம் அளித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிவுசெய்து பிரேமாவதி சுபாஷ் மற்றும் செல்வத்தைக் கைதுசெய்து காவலில் அடைத்தனர்.
Tags:    

Similar News