மதுகுடித்ததை திட்டிய தாயார்: வாலிபர் தற்கொலை
மதுகுடித்தை தாயார் திட்டியதால், மனவிரக்தியில் மண்ணெண்ணெய் ஊற்றி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.;

காவல் நிலையம்
கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, புன்னம், கைலாசபுரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் ராஜசேகர் வயது 30. ராஜசேகர் தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். மே 5ஆம் தேதி இரவு 8:30- மணி அளவில் மது அருந்தி விட்டு வந்த ராஜசேகரை அவரது தாயார் திட்டி உள்ளார்.
இதனால், மனவிரக்தி அடைந்த ராஜசேகர், தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். இதனை கவனித்த ராஜசேகரின் சகோதரர் ஞானசேகர் வயது 26 என்பவர், ராஜசேகரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்தார்.
அங்கு சிகிச்சையில் இருந்து வந்த ராஜசேகர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். எனவே, இந்த சம்பவம் குறித்து ஞானசேகர் காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த ராஜசேகரின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.