ஒழுங்கினசேரி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் அவதி

ஒழுங்கினசேரி பகுதிகளில் ரயில்வே தண்டவாளம் அமைப்பதால் போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

Update: 2024-07-03 18:56 GMT

போக்குவரத்து நெரிசல் 

கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையே நடந்து வரும் இரட்டை ரயில் பாதை பணியின் ஒரு கட்டமாக நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் கூடுதல் தண்டவாளம் அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக பழைய பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் அமைக்கப்பட உள்ளது.  புதிய பாலம் அமைக்கும் பணி பாதியில் நிற்கும் நிலையில் கூடுதல் தண்டவாளம் அமைப்பதுடன், பழைய பாலத்தை இடிக்கவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து பணிகளை தொடங்கி உள்ளது.      

இதன் காரணமாக தற்போது ஒழுகினசேரியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.நாகர்கோவில் மாநகரின் நுழைவு வாயில் பகுதி என்பதால், தற்போது நாகர்கோவிலுக்குள் வாகனங்கள் வருவதற்கும், நாகர்கோவிலில் இருந்து வாகனங்கள் வெளியேறவும் முடியாமல் சிக்கி திணறி வருகின்றன.      

காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி கல்லூரி மற்றும் அரசு தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து செல்பவர்கள் அதிக அளவில் செல்வதால் குறுகலான இந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் வரை போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

Tags:    

Similar News