கால்நடைகள் மேய்வதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கை
திருப்பூர் மாவட்டம், காங்கயம்-திருப்பூர் சாலைகளின் நடுவே கால்நடைகள் மேய்வதால் வாகன ஓட்டிகள் பெறும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
Update: 2024-05-11 15:33 GMT
காங்கயம் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பூர் வரை செல்லும் பிரதான சாலையில் படியூர், முதலிப்பாளையம், நல்லூர், ராக்கியாப்பாளையம் மற்றும் திருப்பூர் மாவட்ட பகுதிகளில் இருந்து காங்கயம் வருபவர்களும் காங்கயம் பகுதியில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு காலை நேரங்களில் வேலைக்கு செல்பவர்கள், பள்ளிகள் செல்லும் குழந்தைகள் மற்றும் மாலை நேரங்களில் அவர்கள் வீடு திரும்பவும் இந்த சாலையை உபயோகித்து வருவதாலும் திருப்பூருக்கு கம்பெனிக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் இருசக்கர வாகனம், கார், பேருந்தில் பயணம் செம்வதாலும், அதிகமான கனரக வாகனங்களும் செல்வதாலும் இந்த சாலையில் அதிக போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் காங்கயம் திருப்பூர் சாலையின் நடுவே சிலர் கால்நடைகளை ஆபத்தறியாமல் மேய்த்து வருகின்றனர். இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமமாகவும் ஆபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும் கால்நடைகளும் பேருந்து மற்றும் லாரி போன்ற வாகனச் சக்கரத்தில் சிக்கி இறக்கவும் நேரிடும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே இது சம்பந்தப்பட்ட துறை இதனை கண்காணித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.