சாலையின் மையப்பகுதியில் தடுப்பு : விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

காஞ்சிபுரம் ஏனாத்துார் புறவழிச் சாலையில் தடுப்பு வைக்கப்படுள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் நலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.

Update: 2024-02-01 04:37 GMT


காஞ்சிபுரம் ஏனாத்துார் புறவழிச் சாலையில் தடுப்பு வைக்கப்படுள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் நலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.


காஞ்சிபுரம் -ஏனாத்துார் புறவழிச் சாலையாக, சென்னை செல்லும் வாகனங்கள் தாமல்வார் தெரு வழியாக சென்று வருகின்றன. இந்நிலையில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, மூன்று மாதங்களுக்கும் மேலாக 'மேன்ஹோல்' வழியாக சாலையில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது. இதனால், 'மேன்ஹோல்' சுற்றியுள்ள பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு தார் சாலை சேதமடைந்துள்ளதால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வந்தனர்.

இதையடுத்து, பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய வேண்டிய மாநகராட்சி நிர்வாகம், மாறாக சாலை சேதமடைந்த பகுதியில் சாலை தடுப்பு அமைத்துள்ளனர். வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையின் மையப் பகுதியில், போக்குவரத்துக்கு இடையூறாக சாலை தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளதால் வேகமாக வரும் வாகனங்கள், தடுப்பு உள்ள பகுதியில் திடீரென சாலையோரம் ஒதுங்குவதால், பின்னால் வரும் வாகனம் மோதி, விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்கி, சேதமடைந்த சாலையை தார் ஊற்றி சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News