குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

சிவகாசி அருகே ரிசர்வ்லயன்-பாரதிநகர் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2024-07-04 06:39 GMT

சேதமடைந்த சாலை 

விருதுநகர் மாவட்டம், பட்டாசு நகரான சிவகாசியில் இன்றளவும் பல்வேறு கிராமபுற சாலைகள் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில்தான் உள்ளது. குறிப்பாக சிவகாசி அருகே ரிசர்வ்லையனிலிருந்து பாரதி நகர், என்ஜிஓ காலனி, மீனாட்சி நகர்,தாலுகா,யூனியன் அலுவலகங்கள்,சாட்சியாபுரம், போலீஸ் காலனி வழியாக செல்லும் சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் குண்டும் குழியுமாக காணப்படுகின்றது.

இந்த வழித்தடத்தில் இரு மார்க்கமாக ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன.சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் இந்த சாலை உள்ளது.பள்ளி வாகனங்கள் ஏராளமான டூவீலர்கள் பயன்படுத்தும் இந்த சாலைகள் அங்காங்கே பஞ்சரான நிலையில் காணப்படுகின்றது. போக்குவரத்திற்கு லாயக்கற்ற இந்த சாலையில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக்கொள்வது தொடர் நிகழ்வாக நடைபெற்று வருகின்றது.ஆபத்தான காலங்களில் வரும் ஆம்புலனஸ் வாகனம் கூட ஆமை வேகத்தில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. சாலையை மேம்படுத்துவதில் அதிக அக்கறை  காட்டினால் விபத்துகளை தவிர்க்க உதவும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News