விஷ்ணு நகரில் மண் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
By : King 24X7 News (B)
Update: 2023-11-04 04:50 GMT
விஷ்ணு நகரில் மண் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
சின்ன காஞ்சிபுரம் விஷ்ணு நகரை ஒட்டி, ஓரிக்கை மிலிட்டரி சாலை உள்ளது. சமீபத்தில், ஓரிக்கை சாலை அகலப்படுத்தப்பட்டது. இதனால் விஷ்ணு நகருக்கு செல்லும் சாலையின் தரைமட்டத்தில் இருந்து ஓரிக்கை மிலிட்டரி சாலை, 8 அடி உயரத்திற்கு மேல் உள்ளது. இதில், விஷ்ணு நகருக்கு செல்லும் அணுகு சாலை மண் சாலையாக உள்ளதால், மழைக்காலத்தில் வழுக்குவதால் உயரமாக உள்ள இணைப்பு சாலையில் சென்று வர இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சிரமப்படுகின்றனர்.
எனவே, ஓரிக்கை மிலிட்டரி சாலையில் இருந்து, விஷ்ணு நகருக்கு செல்லும் இணைப்பு சாலைக்கு, தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.