பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகளை வழங்கிய எம்.பி

சோனியா காந்தியின் பிறந்தநாளை காங்கிரஸார் கொண்டாடினர்;

Update: 2023-12-15 07:34 GMT
விஜய் வசந்த் எம்பி மக்களுக்கு மரக்கன்று வழங்கினார்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

குமரி மேற்கு மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி மேற்கு மாவட்ட அலுவலகத்தில் வைத்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் 77- வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பிறந்தநாள் விழாவிற்கு காங்கிரஸ் கமிட்டி மேற்கு மாவட்ட தலைவர் பினுலால் சிங் தலைமை தாங்கினார்.     

 தமிழக காங்கிரஸ் கட்சி சட்டமன்ற துணைத்தலைவரும்,  கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தனர். கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கேக் வெட்டி அனைவருக்கும் பகிர்ந்து அளித்தார்கள். மேலும் ஏழைகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி சிறப்பித்தார்.      

நிகழ்ச்சியில் குழித்துறை திமுக நகர் மன்ற தலைவர் திரு.பொன். ஆசைத்தம்பி, மாநிலபொதுக்குழு உறுப்பினர் ரத்தினகுமார், மாநில பொதுச் செயலாளர்கள் ஆஸ்கர் பிரிடி உட்பட நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News