எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி
காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு மோடி மற்றும் அமித்ஷா தோல்வியாகவே பார்க்க வேண்டும் என எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டியளித்தார்.
காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு மோடி மற்றும் அமித்ஷா தோல்வியாகவே பார்க்க வேண்டும் எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி தமிழகம் மீண்டும் வஞ்சிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் கேபினட் அமைச்சர்கள் இல்லாமல் செய்திருக்கிறார்கள் தமிழகத்திற்கு உரிய மரியாதை மோடி அரசு தரவில்லை. வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் 223 பிறந்தநாளை முன்னிட்டு மதுரை திருநகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்பி மாணிக்கம் தாகூர் கூறுகையில்: மோடி ஆட்சி இழக்கின்ற நிலையிலிருந்து 303 எனஇருந்த நிலையில் 239 ஆக குறைந்து. சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைத்திருக்கிறார். மூன்றாவது முறையாக பதவி ஏற்கும் மோடியின் நிகழ்ச்சியில் அவர் உயிர் தோழர் அதானிக்கு கொடுக்கின்ற முக்கியத்துவமும் இந்த அரசு தொடர்ந்து அதானிக்கான அரசாக செயல்படும் என்பதில் எந்தவித ஐயமில்லை. பிரதமரின் எண்ணமும் செயலும் அதானியை ஒட்டியே இருக்கபோகிறது. அதானிக்கான அரசாங்கம் அரசாக செயல்படப்போகிறது என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. பீகார் மாநில தேர்தல் வரை தான் இந்த அரசு தொடரும் அதன் பிறகு இந்தியா கூட்டணி தலைமையிலான அரசு அமைவதற்கான வாய்ப்பு உள்ளது.
ராகுல் தமிழகத்திற்கான கேபினட் அமைச்சரவை எந்த ஆட்சியாக இருந்தாலும் காங்கிரஸ் ஆட்சியாக இருந்தாலும் எப்போதும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் இந்த அரசானது எல் முருகன் போன்ற தலித் சமுதாயத்தினரை இணை அமைச்சர் ஆகவே பார்க்கிறது அவருக்கு கேபினட் அமைச்சர் கொடுத்திருக்கலாம் கேபினட் அமைச்சரவை கொடுக்காதது வருத்தமாக உள்ளது. மோடி அரசு தொடர்ந்து தமிழகத்தையும் தமிழகத்தினுடைய தலித் உட்படுத்தப்பட்ட மக்களையும் வஞ்சிக்கிறது என்பது எந்த ஒரு சந்தேகமும் இல்லை. காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் குறித்த கேள்விக்கு : எப்போது பிரதமர் பதவி ஏற்கிறாரோ ஆட்சி அமைகிறதோ அப்போது எல்லாம் தீவிரவாத தாக்குதல் நடைபெறுகிறது.
உலகத்தில் உள்ள ஏழு நாட்டுத் தலைவர்கள் வந்திருக்கும் போது இப்படிப்பட்ட தீவிரவாத தாக்குதல் நடந்திருப்பது என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது இது அமித்ஷா அவர்களின் தோல்வியாகவே பார்க்க வேண்டும் பலமான நாடு பாதுகாப்பான நாடு என கூறும் பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் தோல்வியாகவே பார்க்க வேண்டும் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என பிரேமலதா கூறியது குறித்த கேள்விக்கு : திருமதி பிரேமலதா விஜயகாந்த் பொருத்தவரை முன்னுக்கு பின் புறம்பாக பேசுகிறார் அவர்களின் தேர்தல் ஏஜென்ட் ஆன முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விஜய பிரபாகரன் இருவருமே வாக்கு என்னும் மையத்தில் இருந்தார்கள் அவர்கள் முன்னிலையில் தான் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
22 சுற்றுகள் முடிந்ததற்கு பின்னால் அவர்கள் 4200 வாக்குகள் பின்னிலை என்ற நிலையில் வாக்குச்சாவடி விட்டு சென்றார்கள் தோற்று விட்டோம் என்று நினைத்து சென்று விட்டார்கள் அதன் பிறகு ஒரு நாள் பிறகு சென்னையில் அமர்ந்து பிரேமலதா விஜயகாந்த் பேசுவது அபட்டமானது அவரைப் பொறுத்த மட்டில் சின்னப் பையனுக்கு பார்த்து பண்ணி இருக்கலாம் என்று பேசுவது சினிமாவில் வரக்கூடிய டெம்போவெல்லாம் வைத்து கடத்திக் கொண்டிருக்கிறோம் பார்த்து செய்யுங்கள் என்று கவுண்டமணி சொல்வது போல் உள்ளது. இது அவருடைய அரசியல் முயற்சியின்மையை காட்டுகிறது அவரைப் பொறுத்தவரையில் தேமுதிக தொடர்ந்து விருதுநகரில் தோல்வியுற்று இருக்கிறது விஜயகாந்த் இருக்கும்போதும் தோல்வியுற்றார்கள் இப்போதும் தோல்வி அடைந்து இருக்கிறார்கள் இதை அரசியல் ரீதியாக அவர்கள் சந்திக்க வேண்டும். சிறுபிள்ளைத்தனமாக பேசுவது நல்லது இல்லை மக்களைப் பொருத்தவரை வாக்களித்து இருக்கிறார்கள் இந்தியா கூட்டணியை வெற்றி பெற்று இருக்கிறார்கள். தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதா என்ற கேள்விக்கு : தமிழக அரசியலில் 20 சதவீதம் வாக்குகள் அதிமுக திமுகவுக்கு எதிராக இருக்கும் 70 சதவீத வாக்குகள் அதிமுகவா.? திமுகவா.? என்று இருக்கும். பாஜகவின் வளர்ச்சியை பற்றி அதிமுக தான் யோசனை செய்ய வேண்டும்.? திமுகவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிக்கும் பாஜகவின் வளர்ச்சி பெரிதாக இல்லை.
ராகுல் காந்தி குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதிவு என்பது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வெள்ளை மனம் படைத்தவர் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்தார். அதற்கு நாங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தோம். விருதுநகர் தொகுதியில் முக்கிய திட்டங்கள் குறித்த கேள்விக்கு: விருதுநகர் தொகுதியை பொருத்தவரை மதுரை விமான நிலையம் கையகப்படுத்துவது கூடுதலா பாதையை விரிவாக்கம் செய்வது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகள் முடிக்கப்பட வேண்டும். ரயில்வே துறையில் உள்ள திட்டங்களை விரைந்து முடிக்கப்பட வேண்டும் திருமங்கலம் ரயில்வே நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். கைவிடப்பட்ட மதுரை அருப்புக்கோட்டை தூத்துக்குடி ரயில்வே திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். மேலும் எனக்கு வாக்களித்த விருதுநகர் தொகுதி மக்களுக்கு எனது நன்றி என்று தெரிவித்தார்.
விருதுநகர் தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றது அந்த நட்சத்திரங்கள் பற்றி உங்கள் கருத்து : சென்னையில் இருந்த வந்த நட்சத்திரங்கள் இரவு வரும் போது எப்படி வானத்தில் நட்சத்திரம் தோன்றுமோ அதேபோல் விருதுநகர் தொகுதிக்கு வந்திருந்தார்கள். விடியல் வந்தவுடன் நட்சத்திரம் எப்படி மறையுமோ அதேபோல் போட்டியிட்ட நட்சத்திரங்கள் தற்போது சென்னை சென்றிருக்கிறது. அவர்கள் சென்னைக்கு சென்று இருக்கலாம் நம்மைப் பொறுத்தவரை இந்த தொகுதியில் இருந்து இந்த தொகுதியின் வளர்ச்சிக்காக தொகுதி மக்களுக்காக குரல் கொடுப்பேன் விருதுநகர் மக்களின் குறைகளை நிவர்த்தி பண்ண பாடுபடுவேன் என்றார்.