நாமக்கல் நகராட்சிக்கு பல எண்ணற்ற திட்டங்களை தந்தது திமுக அரசு

திமுக அரசின் திட்டங்கள் தொடர வேண்டும் என்றால் திமுகவிற்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என நாமக்கல் நகர திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் ராஜேஸ்குமார் எம்பி பேசினார்.

Update: 2024-03-28 16:30 GMT
செயல்வீரர்கள் கூட்டம்

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாமக்கல் கிழக்கு, மேற்கு, தெற்கு நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் தேர்தல் பணிமனையில் நடைபெற்றது. இதில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான K.R.N. ராஜேஸ்குமார் எம்பி வாக்குகளை சேகரித்து பேசுகையில்,

கொரோனா தடுப்பூசி முழுமையாக போட்டு கட்டுப்படுத்தியவர் மு.க. ஸ்டாலின். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது ஐந்தாயிரம் ரூபாய் கேட்டோம் ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து நான்காயிரம் வழங்கப்படும் என்றார். ஆட்சிக்கு வந்தவுடன் அதனை செயல்படுத்தினார். தேர்தல் அறிக்கையில் அறிவித்த பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், பால் விலையை குறைத்து பால் உற்பத்தி விவசாயிகளுக்கு ஆறு ரூபாய் லிட்டருக்கு உயர்த்தி வழங்கும் வழங்கினோம். 5 பவுன் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதிமுக அரசு அதனை செயல்படுத்தவில்லை. அறிஞர் அண்ணா, காமராஜர், எம்ஜிஆர், கருணாநிதிக்கு பிறகு குழந்தைகள் பசியோடு பள்ளிக்கு செல்லக்கூடாது என்பதற்காக காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ஆயிரம், மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாதந்தோறும் பெண்களுக்கு ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை கிடைக்காதவர்களுக்கு தேர்தலுக்குப் பிறகு வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது ஆனால் 10 ஆண்டுகள் அதிமுக எதுவும் செய்யவில்லை. நாமக்கல் நகராட்சிக்கு பல எண்ணற்ற திட்டங்களாக, 100 கிலோ மீட்டருக்கு அனைத்து பகுதிகளிலும் தார் சாலை வசதி, குடிநீர் வினியோகம் சீர் செய்திட, நாமக்கல் மாநகராட்சி யாக உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ.24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலைப்பட்டியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது, நாமக்கல்லுக்கு புறவழிச்சாலை ரூ.192 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. திருச்சி ரோடு, பரமத்தி ரோடு பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிலம் வழங்கியவர்களுக்கு ரூ.114 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தொகை வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்திற்கு என தனியாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அமைக்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் அதிமுகவில் எதுவும் செய்யவில்லை.கடந்த இரண்டரை ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி உள்ளது என்றார்.

மேலும் அவர் பேசுகையில், மத்திய அரசு கல்விக் கடனை தள்ளுபடி செய்யவில்லை. பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே லட்சக்கணக்கான கோடிகளை தள்ளுபடி செய்து வங்கிகளை திவால் ஆக்கி விட்டனர், பெட்ரோல், டீசல், கேஸ் விலையை மத்திய அரசு குறைக்கவில்லை.திமுக அரசின் திட்டங்கள் தொடர வேண்டும் என்றால் நீங்கள் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மாதேஸ்வரனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று பேசினார்.

இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் MLA, நாமக்கல் நகர் மன்ற தலைவர் கலாநிதி, நாமக்கல் கிழக்கு நகர செயலாளர் பூபதி, மேற்கு நகர செயலாளர் சிவக்குமார், தெற்கு நகர செயலாளர் ராணா ஆனந்த், மற்றும் மாநில நிர்வாகிகள், நகர் மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள்/ நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News