சமயபுரம் சுங்கச்சாவடியில் மிஸ்டர் பர்கர் உணவக கடை: எம்எல்ஏ திறப்பு
திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடியில் புதிதாக தொடங்கப்பட்ட மிஸ்டர் பர்கர் உணவக கடையை எம்எல்ஏ கதிரவன் இன்று காலை 11 மணியளவில் திறந்து வைத்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-21 13:05 GMT
கடை திறப்பு
திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் திமுக நிர்வாகி புதிதாக மிஸ்டர் பர்கர் உணவக கடையை தொடங்கினார். இந்த கடையை மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி கடை உரிமையாளரை வாழ்த்தினார்.
இந்நிகழ்வில் சமயபுரம் மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், ஊராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள்,இளைஞர் அணியினர், தகவல் தொழில்நுட்ப அணியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.