காங்கேயம் அரசு கல்லூரி மாணவனுக்கு மிஸ்டர் தமிழ்நாடு பட்டம்

பெருந்துறையில் நடந்த பழுதூக்கும் போட்டியில், 52 கிலோ எடை பிரிவில் காங்கேயம் அரசு கல்லூரி மாணவன் ஜெயராமன் மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் பெற்றார்.

Update: 2024-03-26 00:53 GMT

தென்னிந்திய அளவிலான பளுதூக்கும் போட்டி பெருந்துறை தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் காங்கேயம் அரசு கல்லூரி மாணவன் ஜெயராமன் தெந்திய அளவில் 2ம் இடம் பிடித்தார். இதனால் அரசு கல்லூரி மாணவன் ஜெயராமனுக்கு  மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தனியார் கலை அறிவியல் கல்லூரியில் தென்னிந்திய அளவிலான பல் தூக்கும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி உட்பட தென்னிந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் நத்தக்கடையூர் அருகே உள்ள முள்ளிப்புரம் காங்கேயம் அரசு கலை அறிவியல் கல்லூரி இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவன் ஏ.ஜெயராமன் 52 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு பல தூக்கி தென்னிந்திய அளவில் இரண்டாம் இடம் பெற்ற சாதனை படைத்து பரிசு பெற்றார்.

இந்த போட்டியில் காங்கேயம் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவன் ஜெயராமனுக்கு மிஸ்டர் தமிழ்நாடு என்ற பட்டமும் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து தென்னிந்திய அளவில் பளு தூக்கும் போட்டியில் இரண்டாம் இடம் மற்றும் மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் பெற்ற கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவனுக்கு பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் சே.ப.நசீம் ஜான் தலைமை தாங்கினார், மாணவன் ஜெயராமனுக்கு நினைவு பரிசு, கேடயம். பாராட்டு சான்றிதழ் வழங்கினார். விழாவில் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் (பொறுப்பு ) பேராசிரியர் வா. பிரகாஷ் மற்றும் பேராசிரியர்கள், இளங்கலை, முதுகலை மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News