சேறும், சகதியுமான சாலை
மழைநீர் சூழ்ந்து சேறும், சகதியுமாக காணப்படுவதால் சாலை சரி செய்யப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.;
Update: 2024-05-21 07:12 GMT
மழைநீர் சூழ்ந்து சேறும், சகதியுமாக காணப்படுவதால் சாலை சரி செய்யப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
திருமயத்தில் உள்ள கோட்டை பகுதியில் நாள்தோறும் ஏராளமானோர் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதில் கோட்டைவாசல் பகுதியில் மழைநீர் சூழ்ந்து சேரும் சகதியுமாக காணப்படுவதால் அதன் வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும் சுற்றுலா பணிகளும் அவதிக்குள்ளாகின்றனர். இதற்கு தொல்லியல் துறையினர் தக்க நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.