மறவபாளையம் ஊராட்சியில் பல லட்சம் ஊழல் - மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு

மறவபாளையம் ஊராட்சியில் பல லட்சம் ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரையடுத்து முறைகேடாக கொடுக்கப்பட்ட அனுமதி ஆவணங்களை கண்டுபிடித்து சமர்ப்பிக்குமாறு மாவட்ட தணிக்கையாளரிடம் மாவட்ட திட்ட இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2024-06-26 04:20 GMT

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மறவபாளையம் பஞ்சாயத்தில் கடந்த 4 வருடங்களாக பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து வீடு கட்டுவதற்கு, குடோன் மற்றும் தேங்காய் களங்கள் அமைப்பதற்கு வரியை பெற்று கொண்டு முறையான ரசீதுகள் போடப்படாமல் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டிற்கு ப்ளூ பிரிண்ட் எனப்படும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும், சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து இதற்காக ரூ.20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பணம் பெற்றுள்ளாதாகவும், அந்த தொகையை பஞ்சாயத்திற்கு  கட்டணமாக செலுத்தாமல் வரிப்பணம் ஊழல் செய்துள்ளதாகவும் மறவபாளையம் பஞ்சாயத்து துணை தலைவர் மஞ்சு சுப்பிரமணியம் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் மாவட்ட  ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழியிடம் புகார் அளித்துள்ளனர். 

இதனை அடுத்து நேற்று நேரில் ஆய்வை மேற்கொண்ட திட்ட இயக்குனர் மலர்விழி கடந்த4 வருடங்களில்இவ்வாறு தீர்மாணம் நிறைவேற்றப்படாமல் முறைகேடாக கொடுக்கப்பட்ட அனுமதிகளுக்கான சம்பந்தப்பட்டஆவணங்களை கண்டுபிடித்து  சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட தணிக்கையாளரிடம் அறிவுறித்துள்ளார். இது குறித்து பஞ்சாயத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கூறுகையில் முறைகேடு நடந்துள்ள ஆவணங்கள் கண்டுபிடிக்கும் பட்சத்தில் பதவிக்காலம் முடிய இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் ஊழல் செய்யப்பட்ட பணத்தை பஞ்சாயத்து அலுவலகத்திற்கு பெற்று தர வேண்டும் எனவும், இந்த ஊழலினால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பஞ்சாயத்து பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய வசதிகள் தாமதப்படுவதாகவும், எனவே ஊழலில் சம்பந்தப்பட்ட அனைவரின்‌ மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News