கடைகளை அகற்ற நகராட்சி ஆணையாளர் உத்தரவு
திருநெல்வேலி மாவட்டம்,அம்பாசமுத்திரத்தில் தனியார் கட்டுபாட்டில் இருந்த சந்தை புறம்போக்கு இடம் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து கடைகளை அகற்ற நகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.;
Update: 2024-02-18 05:31 GMT
கடைகளை அகற்ற நகராட்சி ஆணையாளர் உத்தரவு
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வண்டிமலைச்சி அம்மன் கோயில் அருகே நீண்ட காலமாக தனியார் கட்டுப்பாட்டிலிருந்த இடத்தில் வியாழன், சனிக்கிழமைதோறும் சந்தை செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த இடம் அரசு புறம்போக்கு நிலம் என மதுரை கிளை தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து வரும் 20ஆம் தேதிக்குள் சந்தை பகுதியில் உள்ள கடை கட்டிடங்களை அகற்ற வேண்டும் என நகராட்சி ஆணையர் ராஜேஷ்வரன் அறிவித்துள்ளார்.