குடிநீர் சிக்கனமாக பயன்படுத்த நகராட்சி கமிஷனர் அட்வைஸ்

கோடையில் பற்றாக்குறையை சமாளிக்க குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2024-04-27 04:45 GMT

கோடையில் பற்றாக்குறையை சமாளிக்க குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார். 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பொது மக்களுக்கு குடிநீர் சிக்கனமாக பயன்படுத்த குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் தகவல் தெரிவித்துள்ளார்.  இது குறித்து நகராட்சி கமிஷனர் குமரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :

குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காவிரி ஆற்றினை நீர்  ஆதாரமாக கொண்டு, தினசரி 7.20 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு, பொதுமக்கள் நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 50 லிட்டர் வீதம் தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நிலவி  வரும் மிக கடுமையான கோடை வெப்பம் காரணமாக, காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது. எனவே, நகராட்சியால் வழங்கப்படும் குடிநீரை, பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

மேலும், குடிநீர் இணைப்பில் மின் மோட்டார் கொண்டு உறிஞ்சுவது, கண்டறியப்பட்டால், மின் மோட்டாரை பறிமுதல் செய்வதுடன், குடிநீர் உப விதிகளின்படி, அபராதம் விதிக்கப்பட்டு, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். எனவே கோடை காலத்தில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News