சிவகாசியில் பள்ளம் தோண்டிய நபர்களுக்கு மாநகராட்சி அபராதம்

சிவகாசியில் பள்ளம் தோண்டிய நபர்களுக்கு மாநகராட்சி அபராதம் விதித்துள்ளது.

Update: 2024-05-28 10:13 GMT
சிவகாசியில் பள்ளம் தோண்டிய நபர்களுக்கு மாநகராட்சி அபராதம்....

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் அனுமதியின்றி பள்ளம் தோண்டியவர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.சிவகாசி மாநகராட்சியில் 36 வது வார்டில் சந்தோஷ்குமார் என்பவர் குடிநீர் குழாய் பதிக்க மாநகராட்சியின் உரிய அனுமதி இல்லாமல் பொது சாலையின் நடுவே பள்ளம் தோண்டியுள்ளார்.

பொது போக்குவரத்திற்கு இடையூறு அளிக்கும் வகையில் பள்ளம் தோண்டியதாக மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் மாநகர மேற்பார்வையாளர்கள் முத்துராஜ்,மதியழகன் ஆகியோர் சந்தோஷ்குமாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதே போன்று 35 வார்டில் மருதுபாண்டி மேட்டு தெரு வழியாக விருதுநகர் செல்லும் ரோட்டில் சுதாகரன் என்பவர் மாநகராட்சி அனுமதி பெறாமல் ரோட்டில் உருஞ்சி குழாய் பதிக்க பள்ளம் தோண்டும் பொழுது நல்ல தண்ணி குடிநீர் சேதப்படுத்தியதிற்காக ரூ.10ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Tags:    

Similar News