திமுக வேட்பாளருக்கு ஆதரவாக நகராட்சி கவுன்சிலர் வாக்கு சேகரிப்பு

தாராபுரத்தில் தி.மு.க  வேட்பாளர் பிரகாசுக்கு ஆதரவாக நகராட்சி  கவுன்சிலர்  கமலக்கண்ணன்   வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.;

Update: 2024-04-05 06:57 GMT

வாக்கு சேகரிப்பு 

தி.மு.க. சார்பில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராககே.இ.பிரகாஷ் போட்டியிடுகிறார். தினசரி பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு  உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்ககோரி  தாராபுரம் நகராட்சி கவுன்சிலரும்,  நகர தி.மு.க. துணை செயலாளருமான வி.கமலக்கண்ணன் நிர்வாகிகளுடன்  ஓப்பன் பைபிள் தேவாலயத்தில் தி.மு.க சாதனை பட்டியல் அடங்கிய துண்டு பிரசுரங்களை கொடுத்து வாக்குகள் சேகரித்தார்.

Advertisement

அப்போது தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதல்அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்து 3 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி. அரசின் சாதனைகளை பட்டியலிட்ட துண்டு பிரசுரங்களை நிர்வாகிகளுடன் வழங்கி தி.மு.க. வேட்பாளர் கே.இ. பிரகாசுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். நிகழ்ச்சியின் போது தாராபுரம் ஒன்றிய செயலாளர் எஸ். வி.செந்தில்குமார், தாராபுரம் நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கே.செல்வராஜ் மாவட்ட சிறுபான்மை அமைப்பாளர் கலைச்செல்வன், மற்றும் ஒய்.எம்.சி.ஏ. பொறுப்பாளர் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தனர். அப்போது நகராட்சி கவுன்சிலர் வி. கமலக்கண்ணனுக்கு பொதுமக்கள் சார்பில் வரவேற்பு அளித்தனர்.

Tags:    

Similar News