நகராட்சி மின் மயானம் பராமரிப்பு பணி - இரண்டு நாட்கள் மயானம் மூடல்
குமாரபாளையம் நகராட்சிநகராட்சி மின் மயானம் பராமரிப்பு பணி காரணமாக ஜூன் 20, 21 இரு நாட்கள் பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;
Update: 2024-06-20 01:36 GMT
நகராட்சி மின் மயானம் பராமரிப்பு பணி
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி மின் மயானம் பராமரிப்பு பணிகளுக்காக ஜூன் 20, 21 இரு நாட்கள் பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக நகராட்சி கமிஷனர் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் குமரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, குமாரபாளையம் நகராட்சி மின் மயானம் கலைமகள் தெருவில் செயல்பட்டு வருகிறது. இதில் ஜூன் 20, 21 ஆகிய இரு நாட்கள் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதனால் இறந்தவர் சடலங்கள் எரியூட்டும் பணிகள் இரு நாட்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்கிறேன். ஜூன் 22 முதல் வழக்கம்போல் மின் மயானம் செயல்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.