பழநியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு நகராட்சி கடும் எச்சரிக்கை
பழநி நகரில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தால் பறிமுதல், அபராதம் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Update: 2024-04-21 09:17 GMT
தமிழகத்தில் பக்தர்கள் அதிகம் வரக்கூடிய முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில். தற்போது பள்ளி கோடை விடுமுறையையொட்டி பழநி நகரில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்களின் நலன் கருதி பழநி நகரில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதன் காரணமாக நகரில் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த வேண்டாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தால் அபாரத நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.