ராமநாதபுரம்: சுட சுட கிடா விருந்து

கமுதி அருகே பெருமாள் தேவன் பட்டி தர்ம முனீஸ்வரர் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு 103 கிடாய்கள் பலியிட்டு கமகம அசைவ விருந்து நடைபெற்றது.

Update: 2024-05-27 14:49 GMT

கமுதி அருகே உள்ள பெருமாள் தேவன் பட்டி கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற தர்ம முனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் உள்ள தர்ம முனீஸ்வரர் சுயம்பாக உருவாகி உள்ளதால் சுற்று வட்டாரத்தில் உள்ள 100 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வழிபட்டு வரும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்கி வருகிறது.

மேலும் இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தாங்கள் வேண்டுதல் நிறைவேறி விட்டால் திருவிழாவில் ஆடுகளை காணிக்கை யாக கொடுக்கின்றனர். அவ்வாறு இப்பகுதி மக்களின் வருடாந்திர வைகாசி திருவிழா நேற்று நடைபெற்றது. நேற்று முன் தினம் இரவு கோவில் முன்பு பக்தர்கள் வேண்டுதலாக கொடுத்த 103 ஆட்டுக் கிடாய்கள் பலியிடப்பட்டு, 2000 கிலோ கறி 11 அண்டாக்களில் சமைக்கப்பட்டு, 1500 கிலோ அரிசி சாதம் சமைக்கப்பட்டு, சாதம் மலை போல் குவிக்கப் பட்டு சிறப்பு பூஜை நடத்தி பின்னர் நேற்று காலை 9 மணி முதல் மாலை 6 வரை கமகம அசைவ விருந்து அன்னதானம் நடை பெற்றது.

இந்த அன்ன தானத்தில் அனைத்து சமுதாய மக்களும், பணக்காரர்கள், ஏழை என்று ஏற்றத் தாழ்வின்றி சரிசமமாக இந்த அன்னதானத்தில் கலந்து கொண்டு சாப்பிட்டனர். இதில் கமுதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தர்ம முனிஸ்வரரை தரிசித்து அன்னதானத்தில் கலந்து கலந்து கொண்டனர்

Tags:    

Similar News