கணவர் கொலை: இளம்பெண் காவல் நிலையத்தில் சரண்
குடிபோதையில் தாக்கவந்த கணவரை பாறையால் குத்தி கொலை செய்த இளம்பெண் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
By : King 24X7 News (B)
Update: 2023-12-24 11:15 GMT
திண்டுக்கல், நத்தம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் ( 40). இவர் ஓட்டுனராக பணியாற்றினார். இவரது மனைவி பாண்டீஸ்வரி ( 33). இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.மதுபழக்கத்திற்கு அடிமையான ராஜேந்திரன் எப்பொழுதும் மதுபோதையில் இருந்து வந்ததால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை ராஜேந்திரன் தனது மனைவியை கடப்பாரையை கொண்டு தாக்க முயன்ற போது பாண்டீஸ்வரி தன்னை காத்துக் கொள்வதற்காக கடப்பாரையை பிடுங்கி கணவரை தாக்கியுள்ளார்.இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
கணவர்இதனை தொடர்ந்து கணவனை கொலை செய்த பாண்டீஸ்வரி நத்தம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.