இரவல் கொடுத்த இருசக்கர வாகனத்தை திருப்பி கேட்டதால் கொலை - நண்பர் கைது

திருப்பூரில் இரவல் கொடுத்த இருசக்கர வாகனத்தை திருப்பி கேட்டதால் நண்பரை தலையில் கல்லை போட்டு கொலை செய்தவரை தெற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-07-04 05:47 GMT

கைது செய்யப்பட்ட பிரகாஷ்ராஜ்

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் மனிஷ்(18) இவரது நண்பர் பிரகாஷ்ராஜ்(23). மணி சொந்தமாக விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை(ktm) வைத்துள்ளார். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் ராஜ் தனது நண்பர் மணிஸிடமிருந்து இரவலாக இருசக்கர வாகனத்தை வாங்கி ஓட்டி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பணம் பிரச்சனை காரணமாக தனது நண்பருக்கு தெரியாமல் இரு சக்கர வாகனத்தை வேறொரு நபருக்கு விற்று உள்ளார்.

இதனிடையே தனது இருசக்கர வாகனத்தை திருப்பி தருமாறு மணிஷ் பிரகாஷ்ராஜிடம் கேட்டு வந்துள்ளார் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தை கேட்கவே, ஒரு கட்டத்தில் திருப்பூரில் இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளதாகவும் அங்கு வந்தால் எடுத்து தருவதாக கூறி பிரகாஷ்ராஜ் தனது நண்பர் மனிஷ் மற்றும் மற்றொரு நண்பர் புகழேந்தியுடன் நேற்று இரவு திருப்பூர் வந்துள்ளார். திருப்பூர் வந்த பின்பு தான் தனது இருசக்கர வாகனத்தை விற்பனை செய்தது குறித்து மனுஷுக்கு தெரியவந்தது .

இதனால் திருப்பூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள ஜம்முனை வீதி பகுதியில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரகாஷ்ராஜ் அருகில் இருந்த கல்லை எடுத்து மணி தலையில் போட்டு கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து சேலம் தப்பிச் சென்றார். இதனிடையே பிரகாஷ்ராஜ் நண்பர் புகழேந்தி இந்த கொலை குறித்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் விசாரணை நடத்திய திருப்பூர் தெற்கு போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்த மணிஸின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சேலம் பகுதியில் பதுங்கி இருந்த பிரகாஷ்ராஜை கைது செய்து திருப்பூர் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News