குறிஞ்சிப்பாடி அருகே முருகன் வேல் வாங்கும் நிகழ்ச்சி
By : King 24X7 News (B)
Update: 2023-11-18 05:03 GMT
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. நேற்று இரவு முருகன் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்த பின்னர் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் மின் ரதத்தில் சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது.