காளான் வளர்ப்பு பயிற்சி முகாம்

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி முகாம் நடக்கிறது.

Update: 2024-06-26 13:28 GMT

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி முகாம் நடக்கிறது. 

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகின்ற ஜூலை 16ம் தேதி முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை மொத்தம் 25 நாட்கள், முழுமையான, காளான் வளர்ப்பு மற்றும் காளான் விதை உற்பத்தி தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பில் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

இந்திய தேசிய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் நிதியுதவியுடன் இப்பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் லாபம் தரும் காளான் வளர்ப்பு முறைகள், விதை உற்பத்தி, காளானின் வகைகள், காளான் வளர்க்கப்படும்போது ஏற்படும் இடர்பாடுகளும், தீர்வுகளும், காளானில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் முறைகள் மற்றும் விறபனை முறைகள் பற்றி தெளிவாக பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

காளான் வளர்ப்பு பற்றிய தொழில் நுட்பங்கள் முழுமையாக விரிவாக எடுத்துரைக்கப்படும். மேலும் காளான்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்திற்கு நேரில் அழைத்துச் செல்லப்பட்டு தொழில் நுட்பங்கள் வழங்கப்படும். பயிற்சியில் கலந்துகொள்பவர்களுக்கு பயிற்சி சான்றிதழ்களும், கையேடும் வழங்கப்படும். காளான் வளர்ப்பு தொழில் தொடங்க தேவையான திட்ட அறிக்கையும் வழங்கப்படும்.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், பண்ணை மகளிர், விவசாய ஊரக இளைஞர்கள், படிப்பு முடித்து வேலையில்லாத மாணவ மாணவிகள், விவசாயம் சார்ந்த களப் பணியாளர்கள், பண்ணையாளர்கள், மற்றும் தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். பயிற்சியில் கலந்துகொள்ள நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

முதலில் வரும் 25 நபர்களுக்குமட்டும் முன்னுரிமை வழங்கப்படும். ஆகையால் பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் நேரில் அல்லது 04286 266345, 266650, 9943008802 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். பயிற்சிக்கு வருபவர்கள் தங்களுடைய கல்விச் சான்றிதழ் , ஆதார் அட்டை மற்றும் சாதிச் சான்றிதழ் கண்டிப்பாக கொண்டுவரவேண்டும் என வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் டாக்டர் வேல்முருகன் தெரிவித்துள்ளர்.

Tags:    

Similar News