தலைக்கவசம் அணிய வேண்டும்: மாநகர துணை ஆணையர் அறிவுரை

திருப்பூரில் விபத்துகளில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு தலைக்கவசம் அணிய வேண்டும் வாகன ஓட்டிகளுக்கு திருப்பூர் மாநகர துணை ஆணையர் ராஜராஜன் அறிவுறுத்தியுள்ளர்.

Update: 2024-03-02 12:27 GMT

துணை ஆணையர் அறிவுரை

திருப்பூர் பின்லாடைக்கு பிரசித்தி பெற்ற நகரமாகும் இங்கு காலை முதல் இரவு நேரம் வரை இருசக்கர வாகனங்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அதிகப்படியாக வாகன விபத்துகளில் உயிர் பலியாகின்றனர்.

இதனை தடுக்கும் வகையில் மாநகர காவல் ஆணையர். பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் கோவையைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பான உயிர் அமைப்பு மற்றும் திருப்பூர் மாநகர காவல் துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி புஷ்பா பேருந்து நிறுத்தம் அருகில் மாநகர காவல் துறையின் துணை ஆணையர். ராஜராஜன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநகர காவல் துணை ஆணையர் வாகன ஓட்டிகளிடம் பேசுகையில் கடந்த ஆண்டு வாகன விபத்துகளில் அதிகப்படியான நபர்கள் தலைக்கவசம் அணியாததால் உயிரிழப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது என்றும் இதனை கருத்தில் கொண்டு வாகன ஓட்டிகள் மற்றும் வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்லக்கூடிய நபர்கள் இருவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும் தலைக்கவசம் அணிவதன் மூலமாக விபத்துகளை தடுக்க முடியும் என்றும் உயிர்களைப் பாதுகாக்க முடியும் என்றும் அறிவுரை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகர போக்குவரத்து காவல்துறையின் உதவி ஆணையர். சுப்புராமன், வடக்கு போக்குவரத்து காவல்துறையின் காவல் ஆய்வாளர். பாண்டியராஜன்,உதவி ஆய்வாளர்கள்.ரமேஷ், கண்ணன் உள்ளிட்ட காவலர்கள் பலர் கலந்து கொண்டனர். S

Tags:    

Similar News