பழையசிறுவங்கூரில் முத்து மாரியம்மன் கோவில் தேர்திருவிழா
பழையசிறுவங்கூரில் முத்து மாரியம்மன் கோவில் தேர்திருவிழா கோலாகலமாக நடந்தது.
Update: 2024-06-10 08:35 GMT
வாணாபுரம் அடுத்த பழையசிறுவங்கூர் கிராமத்தில் உள்ள சாம்பாரப்பன் மற்றும் முத்து மாரியம்மன் கோவில் தேர்திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் காலை மற்றும் மாலை சுவாமிக்கு சிறப்பு பூஜையும், இரவில் சுவாமி வீதியுலாவும் நடந்தது. நேற்று தேர்திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை மாரியம்மன் சுவாமிக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான விசேஷ பொருட்களை கொண்டு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து உற்சவர் முத்துமாரியம்மன் சுவாமியை அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளச் செய்து, தேரோட்டம் தொடங்கியது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.