கிரிவல பாதையில் உள்ள மடங்கள் செயல்பட அனுமதி !
கடை நடத்துவது தொடர்பான முடிவுகளை கண்காணிப்புக்குழு ஆய்வு செய்து முடிவு எடுக்கும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-09 11:42 GMT
நீதிமன்றம்
பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு கோரி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், பழனி கிரிவலப்பாதையில் வணிக நோக்கத்தில் எந்த நடவடிக்கைகளும் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.மேலும், பட்டா உள்ளவர்களை அனுமதிப்பது மற்றும் கடை நடத்துவது தொடர்பான முடிவுகளை கண்காணிப்புக்குழு ஆய்வு செய்து முடிவு எடுக்கும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பழனி கிரிவல பாதையில் உள்ள மடங்கள் தொடர்ந்து செயல்படலாம் எனவும் நீதிபதிகள் கூறினர்.