முட்டுக்காடு படகு சவாரி நிறுத்தம், பயணிகள் ஏமாற்றம்!

முட்டுக்காடு படகு சவாரி நிறுத்தப்பட்டதால் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Update: 2024-01-29 06:48 GMT

முட்டுக்காடு படகு சவாரி நிறுத்தம்

செங்கல்பட்டு மாவட்டம்,கோவளம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு பகுதியில், தமிழக சுற்றுலாத்துறை சார்பில் படகு குழாம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடல் நீரில் சென்று ரசிக்க மோட்டார் படகுகள், துடுப்பு படகுகள், கால்மிதி படகுகள் போன்ற சேவைகள்உள்ளன. இந்நிலையில் கடந்த ஒருவார காலமாக இங்கு படகுகள் இயக்க போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது, இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் வார இறுதி நாட்களில் இங்கு வரும் சென்னையைச் சுற்றியுள்ளவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். கடந்த டிசம்பர் மாதம் சென்னை, செங்கல்பட்டு உட்பட 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் மழையால் வெள்ளம் ஏற்பட்டபோதும், கடற்கரை முகத்துவார பகுதியான முட்டுக்காடு பகுதி, படகு குழாமில் தண்ணீர் இல்லாமல் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து படகு குழாமில் உள்ள சுற்றுலாத்துறை அலுவலர் கூறியது, பருவநிலை மாற்றத்தால் கடல் உள்வாங்கி தண்ணீர் வற்றி இருப்பதாகவும் விரைவில் மாற்றம் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
Tags:    

Similar News